Saturday, 23 January 2010

இணைய வேகம் அதிகமாக Google public DNS சேவையை இணைக்க

          கூளிலின் பல மகத்தான சேவைகளில் ஒன்று Google public DNS சேவையாகும்.  நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட நிறுவனதிடம் வாங்கியிருப்போம். உதாரணமாக: BSNL,AIRTEL,TATA INDICOM ... இவ‌ர் க‌ளைத்தான் Internet Service Provider (ISP)என்று சொல்கிறோம்.

          நாம்  ஒரு இணையதளத்தின் முகவரியை இணைய உலாவி யில் தட்டச்சு செய்து என்டர் செய்தவுடன் அந்த குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கும். இது நம்முடைய  ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) செர்வருக்கு போய் பிறகு அதன் மூலமாக நாம தட்டச்சு செய்த இணையத்தை தேடிப்பிடித்து நமது இணைய உலாவியில் அப்பக்கத்தை திறக்க செய்யும். இந்த சேவையை செய்வதுதான் DNS ஆகும்.  இணைய சேவை வழங்கும் எல்லா நிருவனத்தினரும் தமக்கென்று ஒரு Public DNS severஐ வைத்திருப்பார்கள். இதுபோலவே Google Public DNS ன் இலவச சேவையை நாம பயன்படுத்தினால் இணைய வேகம் அதிகரிக்கும் கூடவே பாதுகாப்பும் கிடைக்கும் இந்த சேவையை நமது கணினியில் Confugure செய்வது மிகவும் எளிமைதான்.
 



         
படத்தை பார்க்கவும் (இநத படத்தை கிளிக் பண்ணினால் முழுபடமாக தெரியும்)
1. நமது கணினியில் Control Panel தட்டவும்

2.  Network Connections என்பதை தட்டவும்.

3.நமது நெட்வொர்க் டிவைஸின் மீது வலது கிளிக் பண்ணி Properties ஐ அழுத்தவும்

4. இப்போது வரும் விண்டோவில் Internet Protocol(TCP/IP)என்பதை தேர்வு செய்யவும்

5.  Properties  ஐ அழுத்தவும்.

6. அப்புறம் Use the following DNS Server Addresses  என்பதை டிக் பண்ணவும்

7. Preferred DNS Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4 என தட்டச்சு செய்யவும்.

 இனிமேல் நமது கணினியை restart செய்து இணைய இணைப்பை ஏற்படுத்தினால் கூடுதல் வேகமும் பாதுகாப்பும்  கிடைக்கும்.



                    

0 comments:

Post a Comment